இறைவர் : அருள்மிகு கபாலீஸ்வரர்
இறைவி :அருள்மிகு கற்பகாம்பாள் அம்மன்
தல மரம் : புன்னை மரம்
தீர்த்தம் : கபாலி தீர்த்தம்
God : Arulmigu Kabaliswarar
Godess :Arulmigu Karpagaambaal Amman
Tree : Punnai Maram
Theertham : Kabali Theertham
இந்த திருமலையில் வருடம் தோறும் பங்குனி உத்திரத்தையொட்டி பிரமோற்சவம் நடந்து வருகிறது. அதில் 8 ம் நாள் திருவிழாவிற்கு அறுபத்திமூவர் உற்சவம் என்று பெயர்.அன்று கபாலீஸ்வரர் அறுபத்திமூன்று நாயன்மார்களுடன் மாலை 3 மணிக்கு திவ்ய சேவை அளிப்பது வழக்கம். பார்வதி தேவியிடமிருந்து ஞானப்பால் உண்டு உலகில் சன்மார்க்கத்தை நிலைநிறுத்திய ஸ்ரீ சுப்பிரமணியர் அவதாரமாகிய திருஞான சம்மந்த ஸ்வாமிகள் காலத்தில் திருமயிலையில் வைச்யர் குலத்தில் சிவநேச செட்டியார் என்பவர் இருந்தார். அவர் பெயருக்கேற்ற படி அவர் சிவபெருமான், சிவனடியார்கள் ஆகியவர்களிடம் பக்தி செலுத்திஇருந்தார்.இவர் திருஞான சம்மந்த ஸ்வாமிகள் செய்த திவ்ய செயல்கள் சன்மார்க்க ஸ்தாபனம் செய்த வழிகள் முதலியன கேள்விப்பட்டு அவரிடம் நல்ல அன்பு பாராட்டி வந்தார். ஆனால் அவரை பார்க்க செட்டியாருக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. ஒவ்வொரு நாளும் செட்டியாரிடம் வந்து எட்டும் திருஞான சம்மந்தரது அற்புத செயல்களெல்லாம் அவருக்கு திருஞான சம்மந்தரது மேலிருந்த அன்பை அதிகப்படுத்தியது.
ஆனந்த பரவசத்தில் தன் பெண் சொத்து முதலியவைகளை திருஞானசமந்த ஸ்வாமிகளுக்கு அர்ப்பிதம் செய்தனர். இவ்வாறு இவர் திருஞானசமந்த ஸ்வாமிகளின் மீது அன்பு வளர்ந்து வரும் நிலையில் இவர் அருமை பெண் பூக்கொய்ய தோட்டத்திற்கு போனவிடைத்து பாம்பு கடித்து இறந்தாள்.சிவபக்தி விஷயத்தில் தன் பெண்ணிடம் இருந்த பற்றால் செட்டியார் சற்று தூக்கித்து விட்டுத் தன் பெண்ணை தகனம் செய்து திருஞானசமந்த சாமிகள் திருமயிலைக்கு வருங்கால் அவர் பாதத்தில் அவள் எலும்பை அர்ப்பிதம் செய்வதாக எண்ணி, அதை ஒரு பானையில் இட்டு அதையே பூம்பாவையாக பாவித்து தகுந்த மரியாதைகள் செய்து வந்தார். திருமயிலைக்கு வடக்கிலுள்ள திருவொற்றியூர் ஸ்வாமி தரிசனத்திற்காக சம்மந்த ஸ்வாமிகள் ஏழுந்தருளியிருப்பதாக செட்டியாருக்கு தகவல் எட்டியது.
உடனே அவர் சம்மந்த ஸ்வாமிகளுக்கு மரியாதை செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டு அவரை எதிர் கொண்டழைத்தவர அவர் திருவொற்றியூரை நோக்கி புறப்பட்டார்.இருவரும் வழியில் சந்தித்தனர்.செட்டியார் ஆனந்த பரவசராகி இருவரும் வார்த்தையாடி வருகையில் செட்டியார் தனது பெண் விசயத்தை முழுவதும் சொல்லி அவள் எலும்பை கிருபைகூர்ந்து அங்கீகரிக்கவேண்டும் என்று சம்மந்த ஸ்வாமிகளை வேண்டிக்கொண்டார். இதைக்கேட்டு கொண்டு சம்மந்த ஸ்வாமிகள் மயிலை வந்து சேர்ந்து, ஸ்தானம் முதலியவைகளை முடித்துக்கொண்டு கபாலீஸ்வரரை செட்டியாருடன் சென்று தரிசித்து சந்நிதியில் வந்து செட்டியாரை நோக்கி அவர் பெண் எலும்பை கொண்டுவரும் படி கட்டளையிட்டார்.
செட்டியார் அந்த எலும்பு பாத்திரத்தை பல்லக்கில் ஏற்றி சீர் முதலியவையோடு எடுத்து வந்து பகவத் சன்னிதானத்தில் வெளியில் கொண்டு நிறுத்தினார். அப்போது சிவபக்தர்கள் ஏல்லோரும் வந்து கூடினர். ஏல்லோரும் மிகுந்த ஆவலுடன் ஏன்னா நடக்க போகிறது என்று கண்கொட்டாது பார்த்து கொண்டிருக்கியில் , சிவபிரானை மனதில் தியானமூலமாக அமைத்துக்கொண்டு அந்த பலத்தால் "சிவனடியார்களுக்கு தொண்டு செய்தலும், சிவபெருமான் திருவிழாவைக்கண்டு ஆனந்தத்திலுமே, துர்ப்பலமான மனிதப்பிறவியின் பயன் என்பது உண்மையாகில் இப்பூம்பாவை உயிருடன் எழட்டும் " என்று சபதம் செய்து சம்மந்த ஸ்வாமிகள் பின்வரும் பதிகத்தை பாடி அருளினார்.
இப்பாட்டு படி வருகையில் முதலில் பூம்பாவை உருவம் பெற்று பின்னர் முறையே பனிரெண்டு வயது வரையில் வளர்ந்த முடிவில் மிகுந்த அழகிய உருவத்தோடு அவள் குடத்தை விட்டு வெளியே வந்தாள்.ஏல்லோரும் கண்டு வியந்தனர். சிவநேச செட்டியார் அனந்த பரவசமாகி சம்மந்த ஸ்வாமிகளின் காலில் விழுந்து தாம் முன்னர் செய்த பிரதிக்கினை படி தம் பெண்ணை சம்மந்த ஸ்வாமிகளுக்கு அர்ப்பணித்து கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.அதற்கு சம்மந்த ஸ்வாமிகள் செட்டியாரை நோக்கி நீர் இப்பூம்பாவையை பெற்றெடுத்ததால் அவளுக்கு பிதா, அதுபோல இறந்த அவளை மறுபடி உயிரோடு எலும்படி செய்த நானும் அவளுக்கு பிதாவாக வேண்டும். ஆதலால் நான் அவளை கல்யாணம் செய்துகொள்வது தகுதியில்லை என்றார்.செட்டியாரும் அவர் உறவினர்களும் மிகுந்த துக்கத்திற்கு ஆளாகி தத்தளிப்பதை கண்டு சம்மந்த ஸ்வாமிகள் வேதத்திலிருந்து நியாயம் காட்டி அவர்களை தேற்றி, திருமயிலை விட்டு வேறு திருப்பதியை தரிசிக்க சென்றனர். சம்மந்த ஸ்வாமிகளுக்கென்று குறிப்பிட்டமையின் பூம்பாவையை செட்டியார் வேறுஒருவருக்கு விவாஹம் செய்து கொடுக்காமல் விட அவள் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து பரமபக்த சிரோமணியாக விளங்கி முடிவில் பரம பதம் பெற்றாள்.